கரூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கரூர் கோர்ட்டுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கரூர் கோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

கரூர்,

கரூர் - திண்டுக்கல் சாலையில் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இந்நிலையில் நேற்று கோர்ட்டின் இ-மெயில் முகவரிக்கு கோர்ட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும், சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் இ-மெயில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கோர்ட்டு ஊழியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வெடிகுண்டு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமையா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் உடனடியாக கோர்ட்டு வளாகத்துக்கு வந்து சோதனை செய்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு உள்ளதா? என கோர்ட்டில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி புரளி என தெரியவந்தது. இதன் பின்னரே கோர்ட்டு அலுவலர்கள், ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com