மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்ய இருந்தார்

மதுரை

மதுரையில் உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, கோவிலில் போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்ய இருந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் , சிக்கந்தர் தர்காவுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தீவிர சோதனை நடைபெற்றது. சோதனையில்வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story