மும்பை-தாய்லாந்து விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் அவசர தரையிறக்கம்

விமானம், 8 மணிநேரம் தாமதத்திற்கு பின்னர் பயணிகளை ஏற்றி கொண்டு மீண்டும் புறப்பட்டு சென்றது.
மும்பை-தாய்லாந்து விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்; சென்னையில் அவசர தரையிறக்கம்
Published on

சென்னை,

மராட்டியத்தின் மும்பை நகரில் இருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகர் நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்றது. 176 பயணிகள், 6 ஊழியர்கள் என 182 பேருடன் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில், பேசிய நபர், விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளன. விமானம் நடுவானில் வெடித்து விடும் என கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

இந்த மிரட்டலை தொடர்ந்து, அந்த விமானம் உடனடியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டு, இரவு 7.20 மணியளவில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது.

8 மணிநேரம் தாமதத்திற்கு பின்னர் பயணிகளை ஏற்றி கொண்டு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த விவகாரத்தில், 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வெடிகுண்டு புரளி விடுத்தது பற்றி அவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com