

திருச்சி,
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமி ழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். தேர்தலில் த.வெ.க. பெற்ற வெற்றியை தொடர்ந்து விஜய் கடந்த 10-ந்தேதி தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். ஒருவர் 2 தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக முதல்-அமைச்சர் விஜய் வெளியூர் சுற்றுப்பயணமாக நாளை (திங்கட்கிழமை) திருச்சிக்கு வருகிறார். திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார். இந்த சூழலில் முதல்-அமைச்சர் விஜய் வருகையையொட்டி திருச்சியில் நாளை (ஜூன் 1ம் தேதி) டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் விஜய் நாளை திருச்சி வரும் நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.