ரூ.1,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ.1,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 1,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் வரும் ஏப்ரல் 15-ந்தேதி நடத்தப்படும்.

போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஏப்ரல் 15-ந்தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com