ஆவடியில் மார்ச் 17-ல் புத்தகக் காட்சி தொடக்கம்

ஆவடியில் மார்ச் 17-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
ஆவடியில் மார்ச் 17-ல் புத்தகக் காட்சி தொடக்கம்
Published on

ஆவடி மாநகராட்சி கூட்டரங்கில் அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூட்டாக கூறியதாவது:-

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து ஆவடி பஸ் நிலையம் அருகே உள்ள எச்.வி.எப். மைதானத்தில் புத்தக கண்காட்சியை நடத்துகிறது.வரும் 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 11 நாட்கள் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.

100 அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெறும். பின்னர் புத்தகத் திருவிழா 2023 இலச்சினையை இருவரும் இணைந்து வெளியிட்டனர். அப்போது ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், கூடுதல் கலெக்டர் ரிஷப், ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com