அரசு பள்ளியில் புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்

புத்தகங்கள் திருட்டு சம்பவம் குறித்து கல்வித்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தினர்.
அரசு பள்ளியில் புத்தகங்கள் திருட்டு: ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
Published on

தேனி,

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் இந்த பள்ளிக்கு ஒரு சரக்கு வேன், 2 மோட்டார் சைக்கிள்களில் சிலர் வந்தனர். அவர்கள் பள்ளியில் வைக்கப்பட்டு இருந்த பாடப்புத்தகங்களை திருடிச் சென்றனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவம் குறித்து கல்வித்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட நடவடிக்கையாக அந்த பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜா ராசிங்காபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், பள்ளி தூய்மை பணியாளர் விஜயன், போடி 7-வது வார்டு நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் இந்த புத்தகங்கள் திருட்டில் ஆசிரியர் பாரதிராஜா, தூய்மைப் பணியாளர் விஜயன் மற்றும் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து பாரதிராஜா, விஜயன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) உஷா நேற்று உத்தரவிட்டார். இதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியனுக்கு 17பி' நோட்டீஸ் வழங்கியும் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com