சென்னையில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகம்

சென்னையில் 4079 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்கள் வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னையில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகம்
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் சென்னையில் 28 லட்சம் வாக்காளர்களுக்கு இன்று முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகின்றது.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று முதல் பூத் சிலிப் விநியோகம் செய்யப்படுகின்றன. வாக்காளர் பெயர், முகவரி, வாக்கு மையம், அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். வாக்குச்சாவடி அலுவலர்கள் பூத் சிலிப் விநியோகத்தை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னையில் 4079 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்கள் வழங்கப்படும். பூத் சிலிப் கொடுக்க வரும் போது வீட்டில் யாரும் இல்லையெனில் அருகில் உள்ள வீட்டில் இருப்பவர்களிடம் பூத் சிலிப் கொடுக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com