எல்லை பாதுகாப்பு வீரர் காணாமல் போன வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

காணாமல் போன எல்லை பாதுகாப்பு வீரரை கண்டுபிடித்து தரக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

மதுரை,

நெல்லையைச் சேர்ந்த சுதா என்பவர், என்னுடைய கணவர் ரமேஷ் எல்லை பாதுகாப்பு படைப் பிரிவு போலீஸ்காரராக கொல்கத்தாவில் பணியாற்றுகிறார். விடுப்பில் கடந்த ஆண்டு ஊருக்கு வந்தார். பின்னர் இங்கிருந்து சென்ற அவரை தெடர்பு கொள்ள முடியவில்லை. அவர், வந்து சேரவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. என் கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம் சீல்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன எல்லை பாதுகாப்பு வீரர் ரமேஷ் குறித்து மேற்கு வங்காள மாநில காவல்துறையிடம் தகவல் பெற்று மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

மேலும் நமது நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரருக்கு நாம் தான் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com