விபத்தில் உடல் நசுங்கி சிறுவன் பலி: லாரி டிரைவர் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்த விபத்தில் உடல் நசுங்கி சிறுவன் பலியானது தொடர்பான வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் உடல் நசுங்கி சிறுவன் பலி: லாரி டிரைவர் கைது
Published on

திருக்காட்டுப்பள்ளி அருகே நடந்த விபத்தில் உடல் நசுங்கி சிறுவன் பலியானது தொடர்பான வழக்கில் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுவன் சாவு

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் கவிபாலன் (வயது5). திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த 25-ந் தேதி அன்று பள்ளி முடிந்து வேனில் இருந்து இறங்கி கவிபாலன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் மீது மோதியது. இதில் லாரி சக்கரங்கள் ஏறி, இறங்கியதில் சிறுவன் கவிபாலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தான்.

டிரைவர் கைது

விபத்தில் சிறுவன் உயிரிழந்தது அந்த பகுதியை சேர்ந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கில் லாரி டிரைவர் தேனி மாவட்டம் பச்சையப்பாபுரத்தை சேர்ந்த பிச்சைமணி (38) என்பவரை திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com