வேலூரில் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

வேலூர் மாவட்டம் பொன்னையாற்றில் குளிப்பதற்காக தனது 2 பேரன்கள், ஒரு பேத்தி என 3 பேரையும் பெண் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.
வேலூரில் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
Published on

வேலூர் மாவட்டம் பரமசாத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இவர்கள் 3 பேரையும் பாட்டி விஜயா அருகே உள்ள பொன்னையாற்றில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது பாலாஜியின் மூத்த மகன் ஜோதீஸ்வரன் (வயது 8) ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் பாட்டியின் கண் எதிரே நீரில் மூழ்கினார். உடனே ஜோதீஸ்வரனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்தபோது ஜோதீஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com