பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி... கடையம் அருகே சோக சம்பவம்

பனைமரம் காய்ந்த நிலையில் இருந்ததால் திடீரென முறிந்து விழுந்தது.
பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி... கடையம் அருகே சோக சம்பவம்
Published on

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலப்பபுரம் கிராமம், ராமர் கோவில் தெருவைச் சேர்ந்த நாராயணன் மகன் பொன் செல்வன் (வயது 16). இவன் நேற்று மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊரின் வெளிப்பகுதியில் உள்ள பனை மரத்தில் கிளிகளை பிடிப்பதற்காக சென்றான்.

அப்போது பொன் செல்வன் ஒரு பனை மரத்தில் ஏறி உள்ளார். அந்த பனைமரம் காய்ந்த நிலையில் இருந்ததால் திடீரென முறிந்து விழுந்தது. இதனால் தவறி விழுந்த பொன் செல்வன் மீது மரம் விழுந்ததில் படுகாயமடைந்தான். உடனே அவன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு அவனை பரிசோதனை செய்தபோது, அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரித்தனர். இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகாண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மயிலப்பபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com