மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் உயிரிழந்தான்.
மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி
Published on

டீ குடிக்க சென்றனர்

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சரண்குமார் (வயது 18). இவர் நேற்று முன்தினம் இரவு டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில், தனது நண்பர் வரதராஜ் என்பவருடன் தண்ணீர் பந்தலில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை சரண்குமார் ஓட்ட, வரதராஜ் பின்னால் அமர்ந்திருந்தார். எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவார சாலையில் சென்றபோது மண்மேட்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சரண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வரதராஜுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சரண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com