தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் உயிரிழப்பு; முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி அறிவிப்பு

சிறுவனின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் உயிரிழப்பு; முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
Published on

சென்னை

தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இந்திரா காலனியை சேர்ந்த சிறுவன் நிவாஸ் (வயது 13). சிறுவனின் தந்தை நாராயணசாமி உயிரிழந்து விட்டார். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவன் சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டான். சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் விஜய் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இந்திரா காலனியை சேர்ந்த சிறுவன் நிவாஸ் என்பவர் மூக்கில் தசை வளர்ந்துள்ளதற்கு சிகிச்சை மேற்கொள்ள கடந்த 3.06.2026 அன்று பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சிகிச்சை பலனின்றி கடந்த 10.08.2026 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com