மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

எட்டயபுரம் அருகே, மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான்
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
Published on

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே, மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான்.

சிறுவன்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள அம்மாமடம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவருடைய மகன் மதன்குமார் (வயது 13). எட்டயபுரத்தில் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

கணேசன் வீட்டின் தொழுவத்தில் ஆடு வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ஆட்டு தொழுவத்தில் உள்ள சுற்றுப்புற கம்பியில் கட்டப்பட்டிருந்த ஆடு சத்தமிட்டது.

இதனையடுத்து மதன்குமார் மற்றும் அவரது தாய் விஜயலட்சுமி ஆகியோர் ஆட்டு தொழுவத்தில் உள்ள ஆட்டை பார்க்க சென்றனர். அங்கு மதன்குமார் அந்த ஆட்டை பிடித்தான்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மதன்குமார் தூக்கி வீசப்பட்டான். ஆடும் தூக்கி வீசப்பட்டது. இதில் ஆடு சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி செத்தது. மதன்குமாரை எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான்.

அவனது உடலை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com