சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை- கமல்ஹாசன்

சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். #pragyananda #Kamal Haasan
சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை- கமல்ஹாசன்
Published on

சென்னை

சென்னையை சேர்ந்த ரமேஷ்பாபு- நாகலட்சுமி தம்பதிகளின் இளைய மகன் பிரக்ஞானந்தா. சென்னை வேலம்மாள் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் பிரக்ஞானந்தாவிற்கு, சிறு வயதிலிருந்தே செஸ் விளையாடுவதில் ஆர்வம் இருந்து வந்துள்ளது.இதனை அறிந்த அவரது தந்தை, சிறுவனை செஸ் பயிற்சிக்கு அனுப்பி வைத்து அவனது திறமையை மேம்படுத்த ஆரம்பித்தார்.

இந்த நிலையில் இத்தாலியில் நடைபெற்ற க்ரெடின் ஓபன் செஸ் போட்டியில் கலந்துகொண்ட பிரகானந்தா, 8-வது சுற்றியே வெற்றியை பெற்றதன் மூலம், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார். மேலும் இதில் சிறப்பம்சமாக, 12 வயது 10 மாதங்கள் 14 நாட்களில் இந்த பட்டத்தினை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 1990-ம் ஆண்டு, உக்ரைனின் செர்ஜே கர்ஜாகின் என்ற சிறுவன் 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

12 வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறுவன் பிரக்ஞானந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என்று அவர் புகழாரம் சூடியுள்ளார்.

பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபுவை கமல்ஹாசன் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.



சாதனையை விட சிறுவனின் கனவை ஊக்குவித்த தந்தையின் செயல் பாராட்டுக்குரியது என்று ரமேஷ் பாபுவிடம் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். அதோடு மாணவன் பிரக் ஞானந்தாவுக்கு முழுமையான ஆதரவையும் அளிக்க தயாராக இருப்பதாக அவரிடம் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.



இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ரமேஷ் பாபு தனது மகனை பார்க்க அழைத்து வருவதாகவும் கமல்ஹாசனிடம் தெரிவித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com