சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவதை கண்டித்த காதலன்.. மாணவி எடுத்த விபரீத முடிவு

போலீஸ் நிலையத்தை மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவதை கண்டித்த காதலன்.. மாணவி எடுத்த விபரீத முடிவு
Published on

தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர் காலனியை சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவருடைய மகள் (வயது 18) தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி சமூகவலைதளத்தில், தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்தா. இதனை அறிந்த மாரிச்செல்வம் கடுமையான வார்த்தைகளால் மாணவியை கண்டித்ததாகவும், இதன் காரணமாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் தெர்மல்நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக மாரிச்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாரிச்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com