வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

நாமக்கல்லில் வராகி அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வராகி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
Published on

நாமக்கல் எம்.ஜி.ஆர். நகரில் பிரசித்தி பெற்ற வராகி அம்மன் கோவில் உள்ளது. மஞ்சமி திதியையொட்டி நேற்று வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள், தயிர், சந்தனம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து வராகி அம்மனுக்கு 10 ஆயிரத்து எட்டு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நள்ளிரவு வரை கோவில் வளாகத்தில் யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com