

சேலம்,
சேலத்தில் பெண் முகத்தில் மிளகாய் பொடி தூவி 6½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஸ்கூட்டர் வழிமறிப்பு
சேலம் குரங்குசாவடி நகர மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 44). இந்த தம்பதி மாமாங்கம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியில் சொந்த மாக மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
தம்பதி மாமாங்கம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியில் சொந்த மாக மளிகை கடை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை சரஸ்வதி தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் டால்மியா போர்டு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு புறப்பட்டு சென்றார். அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரை மோட்டார் சைக்கிளில் அடையா ளம் தெரியாத 2 பேர் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென சரஸ் வதியின் ஸ்கூட்டரை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் சரஸ்வதியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலைதடுமாறி சரஸ்வதி அலறி த்துடித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க நகையை கண்ணி மைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு. தங்களது மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச்சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (குற்றப்பிரிவு) சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்க ளின் பதிவு காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர். நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட் சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகை பறிக்கப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.