3 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டு

காவேரிப்பாக்கம் அருகே 3 கோவில்களில் உண்டியல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
Published on

காவேரிப்பாக்கம் அருகே 3 கோவில்களில் உண்டியல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

3 கோவில்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்து சோளிங்கர் செல்லும் நெடுஞ்சாலையில் உப்பரந்தாங்கல், ராஜபாளையம், அய்யம்பேட்டைசேரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. உப்பரந்தாங்கல் பஸ்நிறுத்தம் அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. அதேபோன்று ராஜபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் கெங்கையம்மன் கோவிலும், அய்யம்பேட்டைசேரி பஸ் நிறுத்தம் அருகில் கன்னிக்கோவிலும் உள்ளன.

பஸ் நிறுத்தம் அருகில் கோவில்கள் இருப்பதால் வெளியூர் செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள், பயணிகள் அனைவரும் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு, உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.

உண்டியலை உடைத்து திருட்டு

இந்தநிலையில் 3 கோவில்களிலும் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதனை நேற்று காலையில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கோவில்களின் உண்டியல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இரவு ரோந்துபணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com