வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு

தாழையூத்து அருகே வீட்டின் கதவை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.
வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு
Published on

தாழையூத்து அருகே உள்ள தென்கலம் பெரியார்நகரை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கிருஷ்ணசாமி (வயது 37). இவர் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரில் நடந்த திருவிழாவுக்காக வந்திருந்தார். சம்பவத்தன்று கிருஷ்ணசாமி தனது தாயாருடன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பூஜை அறையில் வைத்திருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணசாமி, தாழையூத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com