கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுவிட்டனா.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Published on

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்து உள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி நல்லதங்காள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடந்து, ஒரு மாதத்துக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு, கோவில் வளாகத்தில் உள்ள சூலாயுதத்தை கொண்டு அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். உண்டியலில் ரூ. 10 ஆயிரத்துக்கும் மேல் பணம் இருந்திருக்கக்கூடும் என்று கோவில் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com