உண்டியலை உடைத்து பணம் திருட்டு

வேடசந்தூர் அருகே, அய்யப்பன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Published on

வேடசந்தூர் அருகே திண்டுக்கல்-கரூர் சாலையில், சின்னமநாயக்கனூர் பிரிவில் அய்யப்பன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குருசாமி சக்திவேல், பூசாரி ரங்கசாமி ஆகியோர் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் பூசாரி ரங்கசாமி கோவிலுக்கு வந்தார்.

அப்போது, கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கூம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com