கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருக்குறுங்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர்.
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
Published on

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள நம்பிதலைவன்பட்டயத்தில் கண்ணுபிள்ளை இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து மண்டல பூஜை நடந்து வருகிறது. சம்பவத்தன்று இரவு இந்த கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர். இதுபற்றி கோவில் நிர்வாகி சுடலைமுத்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com