கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழைய குற்றவியல் நீதிமன்றம் எதிரே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது. இந்த நீர் சாலையில் தேங்கி நிற்பதால் தார் சாலை சிதிலமடைந்து வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com