

கடையம்:
முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் முன்னோட்டமாக நேற்று ரவணசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன், துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.