மீஞ்சூர் பேரூராட்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

மீஞ்சூர் பேரூராட்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
மீஞ்சூர் பேரூராட்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

வீட்டின் பூட்டு உடைப்பு

மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கியது அரியன்வாயல் கிராமம் இங்கு வசிப்பவர் நடராஜன் (வயது 38). இவர் மீஞ்சூர் பஜாரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடையை திறக்க சென்றுவிட்ட நிலையில் மனைவி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை- பணம் திருட்டு

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம், ஒரு எல்.இ.டி. டிவி மற்றும் 75 கிராம் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com