

மொரப்பூர்:
கடத்தூரை அடுத்த புளியம்பட்டியில் பசுவேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக உண்டியல் பணம் எண்ணப்படாமல் இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் கடப்பாரையால் உண்டிலை உடைத்தனர். அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்தனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.