தாய்ப்பால் தானம் : 10 மாதங்களில் 135 லிட்டர்...! சாதனை படைத்த கோவை பெண்...!

7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார்.
தாய்ப்பால் தானம் : 10 மாதங்களில் 135 லிட்டர்...! சாதனை படைத்த கோவை பெண்...!
Published on

கோவை

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. 27 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவருக்கு ஏற்கனவே 4 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதையடுத்து அவருக்கு சுரக்கும் தாய்ப்பாலை தனது குழந்தைக்குப்போக மீதம் இருப்பதை கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் தொடர்ந்து 7 மாதங்களாக சுமார் 105 லிட்டர் தாய்ப்பாலை தானமாக ஸ்ரீவித்யா வழங்கியுள்ளார். தொடர்ந்து தாய்ப்பாலை தானமாக வழங்கி வரும் இவர், தற்போது வரை 127 லிட்டர் வரை தானமாக வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீவித்யா தற்போது 'ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம்பெற்றுள்ளார். ஸ்ரீவித்யாவின் தாய்ப்பாலை தானத்தால் இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீவித்யாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதோடு இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தினால், மேலும் அதிகமான பிரசவித்த பெண்கள் தங்கள் தாய்ப்பாலை தானமாக வழங்க முனைப்பு காட்டுவர் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com