தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. அரசு மருத்துவமனை டீன் நேரு தலைமை தாங்கி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ், குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட திட்ட அலுவலர் நித்யா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா உள்பட டாக்டர்கள், மாணவ-மாணவிகள், நர்சுகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து புறப்பட்டு கோர்ட்டு ரவுண்டானா வரை சென்று, மீண்டும் மருத்துவமனையில் சென்று முடிவடைந்தது. தாய்ப்பால் வழங்குவதை ஊக்குவிப்போம் என்ற பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com