தஞ்சை அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது

10 வயது மகளுக்கு ராஜா கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
தஞ்சை அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது
Published on

தஞ்சை,

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44).(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). கொத்தனார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் இவருடைய தம்பி இறந்து விட்டதால் அவரது மனைவியையும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. தனது 10 வயது மகளுக்கு ராஜா கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளான சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தனது கணவர் ராஜாவிடம் இதுகு றித்து கேட்டார். அப்போது ராஜா தனது மனைவியை தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜாவின் மனைவி வல்லம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜா தனது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com