மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம், அனுகூலபுரம், சுந்தர்ராஜ் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் சுயம்புலிங்கம் (வயது 43). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுயம்புலிங்கம் தினசரி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

மேலும் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சுயம்புலிங்கம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com