இரணியல் அருகே ரெயில் மோதி கொத்தனார் சாவு

இரணியல் அருகே ரெயில் மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
இரணியல் அருகே ரெயில் மோதி கொத்தனார் சாவு
Published on

நாகர்கோவில்:

இரணியலுக்கும், ஆளூருக்கும் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நாகர்காவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர் வேர்கிளம்பி மங்காட்டை சேர்ந்த ராஜீவ் (வயது 54) என்பது தெரியவந்தது. கேரளாவில் கொத்தனார் வேலை பார்த்து வந்த அவா தற்போது ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கேரளாவுக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் ராஜீவ் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் ராஜீவ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பலியானாரா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com