கிணற்றில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை

சின்னசேலம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
கிணற்றில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை
Published on

சின்னசேலம்

புதுமாப்பிள்ளை

கல்வராயன்மலை வெள்ளிமலை அருகே உள்ள எட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 55) விவசாயி. இவரது மகன் இளையராஜா(25). தொழிலாளியான இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரேகிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சம்பவத்தன்று இளையராஜா அவரது மனைவிக்கு ஜாக்கெட் துணி வாங்கி வருவதாக கூறி சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். அப்போது சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராம எல்லையில் உள்ள விவசாய கிணற்றில் இளையராஜா பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கொலையா?

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com