ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி

கள்ளிமந்தையம் அருகே பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி
Published on

கள்ளிமந்தையம் அருகே தாராபுரம் - ஒட்டன்சத்திரம் சாலையில் இருந்து மலையடிவாரத்தில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்கு மண் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது.

பாலம் கட்டுவதற்காக தாராபுரம் - ஒட்டன்சத்திரம் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளம் தெரியாமல் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இந்த பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள்அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com