வேப்பனப்பள்ளி பகுதியில் துருவ கத்தரிக்காய் அறுவடை தீவிரம்

வேப்பனப்பள்ளி பகுதியில் துருவ கத்தரிக்காய் அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. இதன் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி பகுதியில் துருவ கத்தரிக்காய் அறுவடை தீவிரம்
Published on

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி பகுதியில் துருவ கத்தரிக்காய் அறுவடை தீவிரம் அடைந்துள்ளது. இதன் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

துருவ கத்தரிக்காய்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து நீர்வளம் நன்றாக உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் அதிகளவில் காய்கறி, பழங்களை சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது கத்தரிக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி வேப்பனப்பள்ளி பகுதியில் விவசாயிகள் புதிய முயற்சியாக துருவ வகை கத்தரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது துருவ கத்தரிக்காய் வகைகள் வளர்ந்து நல்ல விளைச்சல்கண்டுள்ளது.

விற்பனை

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், துருவ கத்தரிக்காய் ஒன்று 200 கிராம் முதல் 300 கிராம் வரை வளரக்கூடியது. தற்போது கத்தரிக்காய்கள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளதால் அவற்றை பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.

இந்த வகை கத்திரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய் வரையும், 15 கிலோ கொண்ட கூடையானது ரூ.350 முதல் ரூ.400 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. துருவ கத்தரிக்காய்கள் வேப்பனப்பள்ளியில் இருந்து நாள்தோறும் 2 முதல் 3 டன் வரை விற்பனைக்காக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது என்றனர்.

கிடுகிடு உயர்வு

இந்த நிலையில் கத்தரிக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் துருவ வகை கத்தரிக்காய்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com