

கொருக்குப்பேட்டை கார்னேசர் நகர் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசாக் (வயது 41). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை மூடி விட்டு சென்றார். பின்னர் கடையின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 15 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். இது குறித்து அப்துல் ரசாக் ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.