வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகை-பணம் திருட்டுபோனது.
வீட்டின் பூட்டை உடைத்து 7¾ பவுன் நகை-பணம் திருட்டு
Published on

வையம்பட்டி:

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த வெள்ளாளபட்டி அருகே உள்ள செட்டியபட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 32). இவர் வையம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் மணப்பாறையில் குடியேறிவிட்ட நிலையில், ஊரில் உள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று விஜயகுமாரின் தாய் சித்ரா, அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.37 ஆயிரம் திருட்டுபோயிருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com