வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் கொள்ளை

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் கொள்ளை
Published on

10 பவுன் நகைகள் திருட்டு

கரூர் சின்ன ஆண்டாங்கோவிலை சேர்ந்தவர் ஞானகுரு (வயது 65). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு ஞானகுரு மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதனையடுத்து ஞானகுரு வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது, பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் அலமாரியில் அவர் வைத்திருந்த 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து ஞானகுரு கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com