பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் திருட்டு

எல்லாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் திருட்டு
Published on

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகண்ணு (வயது 57). விவசாயி. இவரது வீட்டின் அருகே தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் கோவிலில் வேலை செய்பவர்களுக்கு மதிய உணவு வாங்கி வர வீட்டை பூட்டி விட்டு துரைக்கண்ணு தனது மோட்டார் சைக்கிளில் பெரியபாளையம் சென்றார். பின்னர் சாப்பாட்டை வேலை செய்பவர்களுக்கு கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு துரைகண்ணு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை மர்ம நபர்கள் உடைத்து அதிலிருந்த ரூ.10 லட்சத்தை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அவர் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். உடனே ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் துரைக்கண்ணு நிலம் வாங்குவதற்காக ரூ.10 லட்சத்தை பீரோவில் வைத்ததாகவும், அவற்றை அறிந்த யாரோ யாரோ? ஒருவர்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் போலீசார் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பீரோவை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com