அக்காளை தாக்கிய தம்பி கைது

அக்காளை தாக்கிய தம்பி கைது
Published on

முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள வடக்கு காடன்குளத்தை சேர்ந்தவர்கள் அருள்ஜோதி மனைவி ராசாத்தி (42). அவரது தம்பி பரோபகர் (49). அருள்ஜோதி குடும்பத்தினர் தற்போது மதுரையில் வசித்து வருகின்றனர். அருள்ஜோதி தனக்கு சொந்தமாக வடக்கு காடன்குளத்தில் உள்ள வீட்டை ஒருவருக்கு விற்பனை செய்து அட்வான்ஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது பத்திரம் முடிக்க ஊருக்கு வந்தபோது, பரோபகர் அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு ராசாத்தி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரோபகர் தனது மனைவி கவுசல்யா, மகன் சுபாஷ் கோபி ஆகியோருடன் வந்து, ராசாத்தியையும், அவரது கணவர் அருள்ஜோதியையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதுபற்றிய புகாரின் பேரில் வடக்கு விஜயநாராயணம் போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து பரோபகரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com