தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கிய அண்ணன், தம்பி கைது

தூத்துக்குடியில் ஒரு வாலிபர், ஒரு பெண்ணிடம் பேசியதை அப்பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேர் சேர்ந்து கண்டித்துள்ளனர்.
தூத்துக்குடியில் வாலிபரை கட்டையால் தாக்கிய அண்ணன், தம்பி கைது
Published on

தூத்துக்குடி, மேலசண்முகபுரம், வண்ணார் 2வது தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக்குமார் (வயது 25). இவர் ஒரு பெண்ணிடம் பேசியதை வண்ணார் 3வது தெருவை சேர்ந்த சங்கர் மகன்கள் செல்வகுமார்(27), சேர்மகுமார்(25) ஆகிய 2 பேரும் கண்டித்துள்ளனர். இதனால் இவர்கள் இடையே முன்விரேதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அண்ணன்- தம்பி 2 பேரும் சேர்ந்து கார்த்திக்குமாரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமார் மற்றும் சேர்மகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com