தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!

அண்ணன், தம்பி இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

கஞ்சா பறிமுதல்

விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த மகேந்திரனின் மகன்களான சுதாகர் (23) மற்றும் ராஜா (21) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சுதாகர் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, கஞ்சா எங்கிருந்து பெறப்பட்டது மற்றும் வேறு யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com