தூத்துக்குடியில் வாலிபர் கொடூர கொலை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் ஸ்டெம் பார்க் அடுத்துள்ள முல்லைநகர் கல்லறை தோட்டத்தில் ஒரு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடியில் வாலிபர் கொடூர கொலை: போலீஸ் விசாரணை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் ஸ்டெம் பார்க் அடுத்துள்ள முல்லைநகர் கல்லறை தோட்டத்தில் ஒரு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினனர்.

கொலை செய்யப்பட்ட வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும். அவரது கழுத்து முகம் பகுதிகளில் ரத்தக்காயங்கள் இருந்தன. அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை? இவர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் போலீசார் இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், ரூரல் டி.எஸ்.பி. சுதிர் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com