மது குடித்ததை கண்டித்த மூதாட்டி கொடூர கொலை: வாலிபர் வெறிச்செயல்

செய்துங்கநல்லூர் பகுதியில் தனது வீட்டு வாசலில் அமர்ந்து மது அருந்திய வாலிபரை கண்டித்த மூதாட்டி, அந்த வாலிபரால் கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
மது குடித்ததை கண்டித்த மூதாட்டி கொடூர கொலை: வாலிபர் வெறிச்செயல்
Published on

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிளாக்குளம், வடக்கு தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி முத்தம்மாள் (வயது 80). இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் வாசலில் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் அருண்பாண்டி(20) என்பவர் மதுபானம் குடித்துள்ளார். இதனால் முத்தம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண்பாண்டி வீட்டு வாசலில் கிடந்த துடைப்ப கட்டையால் முத்தம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மூதாட்டியின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கெலை தெடர்பாக வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கெலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com