பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 13 March 2025 1:27 PM IST (Updated: 13 March 2025 1:28 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை தாக்கல் செய்கிறார்.

சென்னை,

தமிழக சட்டசபையில், இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் கூடியது. கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்தும் நிகழ்வோடு தொடங்கி அந்த கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. சட்டசபையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெரும் வகையில் பட்ஜெட் அமைய உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யும் பட்ஜெட் என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story