

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓ'வேலியில் ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்திற்குள் மின் வயர் அறுந்து விழுந்ததில், ஆண் காட்டெருமை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப் பிரிவுக்கு உட்பட்ட ஓ'வேலி கிராமத்தின் பார்வுட் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் நேற்று ஒரு காட்டெருமையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காட்டெருமை உயிரிழந்து கிடந்த இடத்திற்கு அருகில், மின் வயர் ஒன்று அறுந்து தொடங்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மின் வயர் விழுந்த இடத்தில் இருந்த செடிகள் கருகிப் போய் இருந்தன. எனவே மின்சாரம் பாய்ந்து காட்டெருமை உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கூடலூர் உதவி வனப் பாதுகாவலர் முன்னிலையில், முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலூர் வனப் பிரிவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே காட்டெருமையின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தினர்.
பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, வன கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி, அந்தக் காட்டு காட்டெருமையின் சடலம் சம்பவ இடத்திற்கு அருகிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.