

ஈரோடு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர் வீதியில் உள்ள தனியார் மின்சாதன விற்பனைக் கடையை இடித்து புதிதாக கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கடை பாதி அளவில் இடிக்கப்பட்ட இருந்த நிலையில், அதன் அடியில் அந்தியூர் வார சந்தைக்கு பொருட்களை விற்க வந்த பர்கூர் மலைப் பகுதியை சேர்ந்த 7 விவசாயிகள் படுத்து தூங்கியுள்ளனர். நள்ளிரவில் திடீரென மீதி கட்டிடம் தானாக இடிந்து விவசாயிகள் மீது விழுந்தது. இதில் 7 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.
இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் மட்டும் எந்த காயங்களுமின்றி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.