நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது

நீடாமங்கலம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது.
நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது
Published on

நீடாமங்கலம் பகுதியில் பரவலாக பெய்த மழையால் நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது.

நெல் கொள்முதல் நிலையம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது அய்யம்பேட்டை கிராமம். இங்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு என புதியதாக கட்டிடம் கட்டப்பட்டது. இங்கு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நீடாமங்கலம் பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது.

இந்த நேரடி நெல்கொள்முதல் நிலைய கட்டிட பகுதிக்கு அரசு ஊழியர்கள், விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி வந்து செல்வது வழக்கம். ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால் இந்த கட்டிடம் பூட்டிகிடந்த நிலையில் அதிஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கட்ட கோரிக்கை

அய்யம்பேட்டை, செட்டிசத்திரம், முன்னாவல்கோட்டை, சோனாப்பேட்டை, சிக்கப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் 1,000 ஏக்கருக்கு மேல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அறுவடையாகும் நெல்லை அய்யம்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தான் விற்க வேண்டி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com