15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டிட மேஸ்திரி கைது

ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஒருவர், உடன் வேலை பார்த்து வரும் பெண்ணின் 15 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
பாலியல் தொல்லை, கைது
Published on

காஞ்சிபுரம்,

சிறுமிக்கு பாலியல் தொல்லை:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்த அழகர்சாமி, கட்டிட மேஸ்திரி. இவர் உடன் வேலை பார்த்து வரும் பெண்ணின் 15 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

புகார்:

இந்த நிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

கைது:

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com